கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக புத்தேரி குளத்துக் கரை பகுதிகளில் தண்டவாளங்கள் போடும் பணி நடந்து கொண்டிருக்கின்றது. இச்சுழ்நிலையில் இன்று காலை தண்டவாளங்களுக்கு இடையே வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள், அந்த தண்டவாளங்களுக்கு இடையே மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைப் பார்த்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
பின்பு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வன ஊழியர்கள் விரைந்து வந்து பனிரெண்டு அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்து காட்டில் விட்டனர். இதனையடுத்து தொழிலாளர்கள் தங்கள் பணிகளை மீண்டும் தொடங்கினர்.