சேலத்தில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்

சேலத்தில் ஹெல்மெட் கடையில் ஒன்றில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிப்பு பலரையும் ஈர்த்தது.

சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஹெல்மெட் கடையில் இன்றும் நாளையும் ரூ.449 மதிப்பிலான ஹெல்மெட் வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதையறிந்த பொதுமக்கள் ஹெல்மெட் வாங்கி தலா ஒரு கிலோ தக்காளி எடுத்துச் சென்றனர்.

Translate »
error: Content is protected !!