ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலியாகியுள்ளனர். திருப்பதி முழுவதும் நிலச்சரிவு ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன.
இது பற்றியன வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்டிஆர் ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.