நடிகைகள் கரீனா கபூர் கொரோனா தொற்று உறுதி

 

பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருடனும் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படி மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில்ஒமிக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர், மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அனில் கபூர் மகள் ரியா கபூர் கடந்த வாரம் மும்பையில் நடத்திய விருந்தில் கரீனா மற்றும் அம்ரிதா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதில் அவர்களுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து, இருவருடனும் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!