தேசிய நெடுஞ் சாலையில் திடீரென விரிசல்

 

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ் சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் கனரக வாகனங்கள் பர்லியார் சோதனை சாவடியில் நிறுத்தி மாற்றுபாதையான கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன.

நீலகிரி மாவட்டம், குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ் சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு மாதத்திற்கும் மேலாக, 17 இடங்களில் சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், காட்டேரி பூங்காவில் இருந்து அரை கி.மீ., தொலைவில் சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டது.இதனால், இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் அரசு பஸ்கள் தவிர , மற்ற காய்கறி லாரிகள் கட்டுமான பொருட்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள், அதிக எடை ஏற்றி வரும் லாரிகள் பாதுகாப்பு கருதி பர்லியார் சோதனை சாவடியில் தடுத்து கோத்தகிரி வழியாக ஒரு வழிப்பாதையில் மாற்றப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தை இன்று ஆய்வு செய்து அதன் பின், அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், கனரக வாகனங்களை அனுமதிப்பது குறித்தும் முடிவு செய்யப்பட உள்ளது..இன்று விடுமுறை தினம் என்பதால் உதகைக்கு அதிகஅளவில் வாகனங்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!