வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாடு தப்பிச் சென்ற பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏலம் விட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
மும்பையில் உள்ள ரிதம் ஹவுஸ் என்றழைக்கப்படும் பங்களா, நேப்பியன்சீ சாலையில் உள்ள ஒரு ப்ளாட் மற்றும் குர்லாவில் உள்ள ஒரு அலுவலக கட்டிடம் ஆகியவை ஏலத்திற்கு விடப்பட உள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு நீரவ் மோடி 2018-ம் ஆண்டு குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றார். தற்போது லண்டனில் சிறையிலடைக்கப்பட்டுள்ள அவரை தாய்நாட்டுக்குக் கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.