மதுரவாயல் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் மாடு திருடும் கும்பலை கைது செய்துள்ளனர்.சென்னை மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடையாளம்பட்டு மேம்பாலம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாரை பார்த்து இரண்டு நபர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். உடனடியாக போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நொளம்பூர் பாடசாலை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற ஐயப்பன் வயது 41, அதே பகுதியை சேர்ந்த சாரதி வயது 18 இவர்கள் மாடு திருடுவது தெரியவந்துள்ளது. மேலும் லோடு ஏற்றும் சிறியரக லாரியை கொண்டு வழக்கமாக மாடுகளை திருடிச் செல்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய மற்றொருவர் ஜெகன் வயது 23 என்பதும் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது. ஜெகன் மீது ஏற்கனவே நொளம்பூர், ஜே ஜே நகர், உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தப்பியோடிய ஜெகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்…………..