பஞ்சாப் மாநிலம், லூதியானா நீதிமன்றத்தில் கடந்த வாரம் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற கழிவறையில் கடந்த வாரம் வெடிகுண்டு வெடித்து. இதில் ஒருவர் பலியான நிலையில் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய நீதிக்கான சீக்கியர்களின் அமைப்பு என்று அழைக்கப்படும் எஸ் எஃப் ஜே அமைப்பை சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் முல்தானி என்பவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கையை ஜெர்மன் போலீசார் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பஞ்சாப்பில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களை வாங்கி அனுப்ப ஜஸ்விந்தர் சிங் முல்தானி திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜெர்மன் போலீசார் ஜஸ்விந்தர் சிங் முல்தானியிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.