பும்ராவின் வீடியோ வைரல்

 

தென்னாப்பிரிக்க வீரரை தனது அதிவேக பந்து வீச்சால் தோற்கடித்த இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா-வின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் 211 ரன்கள் தேவை என்ற நிலையில், இன்று ஒருநாள் ஆட்டம் மீதமுள்ளது. இந்த நிலையில் 4 ஆம் நாள் ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீத்தியுள்ள நிலையில் தனது அதிவேக பந்து வீச்சால் தென்னாப்பிரிக்க வீரரை ஜஸ்பிரித் பும்ரா வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜஸ்பிரித் பும்ரா-வின் அசாத்திய பந்து வீச்சு திறமையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!