அஜித் குமார்-ன் வலிமை திரைப்படத்தின் ட்ரெய்லர்


போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் உருவாகி உள்ள வலிமை படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

சாதானின் அடிமைகள் எனும் பைக் ரேஸ் மாஃபியா கும்பலை பிடிக்க லோக்கல் பைக் ரேசர் ஒருவர் எப்படி போலீஸ் அதிகாரியாக மாறி வில்லன் டீமை வேட்டையாடுகிறார் என்பது தான் வலிமை படத்தின் ஒன்லைனர் என இயக்குநர் எச். வினோத் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்த நிலையில், வலிமை டிரைலர் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் மெர்சல் காட்டுகிறது.

தற்போது வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியாகி உள்ளது. சோனி மியூசிக் சவுத் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் யூடியூப் சேனல்களில் வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.

Translate »
error: Content is protected !!