தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டி காக் ஓய்வு

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் குயின்டன் டி காக், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்து முடிந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்தது. இது தென் ஆப்ரிக்கா அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் போட்டிக்கு பின் திடீரென அந்த அணி சார்பில்  வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் குயின்டன் காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக  ஓய்வு பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  அவரது மனைவிக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதால், குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட அவர் விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!