தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைசகர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், 21 பொருள்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைசகர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் இன்று முதல் வரும் 10ம் தேதி வரை ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ள 21 பொருட்களின் விவரம் வருமாறு:-
பச்சரிசி – 1 கிலோ
வெல்லம் – 1 கிலோ
முந்திரி – 50 கிராம்
திராட்சை – 50 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
பாசிப்பருப்பு – 500 கிராம்
நெய் – 100 கிராம்
மஞ்சள் தூள் – 100 கிராம்
மிளகாய்தூள் – 100 கிராம்
மல்லித்தூள் – 100 கிராம்
கடுகு – 100 கிராம்
சீரகம் – 100 கிராம்
மிளகு – 50 கிராம்
புளி – 200 கிராம்
கடலைபருப்பு – 250 கிராம்
உளுத்தம்பருப்பு – 500 கிராம்
ரவை – 1 கிலோ
கோதுமை மாவு – 1 கிலோ
உப்பு – 500 கிராம்
கரும்பு – 1 (முழுமையானது)
துணிப்பை – 1