கர்நாடகாவில் இருந்து கேரளா நோக்கி சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வயல்வெளியில் தரையிறங்கியது.
கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அத்தியூர் கிராமத்தில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான வயல்வெளியில் ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியதைப் பார்த்த மக்கள் அதனை வேடிக்கை பார்க்கக் குவிந்தனர்.
விசாரணையில் கர்நாடகாவைச் சேர்ந்த பாரத்- ஷீலா என்ற வயதான தம்பதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக கேரளா செல்வது தெரியவந்தது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக விமானி கூறியதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.