பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கைக்கு 18 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ள மத்திய அரசு, ஈழத்தமிழர் சிக்கலை தீர்க்க இலங்கை அரசுக்கு நிபந்தனை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உணவு மற்றும் எரிபொருள் வாங்குவதற்காக மத்திய அரசு கடன் வழங்கியிருக்கிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், சீனாவின் பக்கம் சாயும் இலங்கை அரசை இந்தியாவின் பக்கம் திருப்புவதற்கான ராஜதந்திர நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டாலும், ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் பெற்று தருதல், கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்டவைகளை வலியுறுத்தி மத்திய அரசு நிபந்தனை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!