பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் (வயது 55) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
லாகூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து பதவி உயர்வு பெற்ற ஆயிஷா மாலிக்கை நியமனம் செய்ய அதிபர் ஆரிஃப் அல்வி ஒப்புதல் அளித்துள்ளார். 2031ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில், அதுவரை அவர் பதவியில் நீடித்தால் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்ற வாய்ப்புள்ளது.