ஜம்மு-காஷ்மீரில் ஒரே ஆண்டில் ரூ.88 கோடி மதிப்பு பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரில், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சோதனையில் 3 ஏ.கே 47 துப்பாக்கி உள்பட 88 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை எல்லை பாதுகாப்பு படையினர்  கைப்பற்றியுள்ளனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுறுவலை கண்காணிக்க எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளூர் போலீசாருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் அவ்வப்போது தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளை அடையாளம் கண்டு, பயங்கர ஆயுதங்களை கைப்பற்றியும் வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த ஆண்டில் மட்டும், எல்லை பாதுகாப்பு படையினர் 3 ஏ.கே 47 துப்பாக்கி, 9  கை துப்பாக்கிகள், 1071 வெடி மருந்துகள், 20 கையெறி குண்டுகள் என 88 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவற்றுடன் 17புள்ளி 3 கிலோ ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!