’வலிமை’படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள வலிமை படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், போனி கபூர் தயாரித்துள்ளார். ‘வலிமை’ படத்தின் பணிகள் முடிந்து பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா 3ஆம் அலை காரணமாக ரிலீஸ் தேதி  ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது வலிமை படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அவரது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!