சூர்யா நடிக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ ட்ரைலர்

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுடன் இணைந்து சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் 10-ஆம் தேதி திரையங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் சூர்யாவின் படம் என்பதால், எதற்கும் துணிந்தவனுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!