மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  நியூசிலாந்து  வெற்றி

இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், 62 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. பின்னர், 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 46 புள்ளி 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

 

Translate »
error: Content is protected !!