சமூக வலைதளங்களில் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாசமாக பேசியும் பல லட்சக்கணக்கில் பணம் பறித்த பயாசிடம் ஆரணி டவுன் போலீசார் விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளம் பெண்களுடன் சமூக வலைதளங்களில் நண்பராக பழகியும், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியும் பணம் பறித்துள்ளார். குறிப்பாக செல்போன் மற்றும் மெடிக்கல் கடை நடத்தி வருகிறேன் எனவும், அதற்கு பணம் தேவை வருகிறது எனவும் கூறி பணம் பறித்துள்ளார். மேலும், சில பெண்களிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ பதிவு செய்து கொண்டு மிரட்டி பணம் பறித்து, அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்ததுள்ளது.
பயாசிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது அவரிடம் இரவு நேரங்களில் பேசக்கூடிய இளம்பெண்கள் சிலர் அவருக்கு போன் செய்து கொண்டும் மெசேஜ் அனுப்பி கொண்டும் இருந்த நிலையில், போலீசார் அவர்களிடம் பயாஸ் ஒரு மோசடி நபர் எனவும், அவரை நம்பி இந்த எண்ணுக்கு போன் செய்யாதீர்கள் எனவும் அறிவுரை கூறினர்.
அப்போது சில பெண்கள் பயாஸ் மிகவும் நல்லவர் எனவும், அவர் எங்களுக்கு வேண்டும் எனவும், பயாஸ் எப்படிப்பட்டவராக இருந்தாலும் பரவாயில்லை அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிறகு நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் எனவும், மேலும் சில பெண்கள் பயாசைவிட்டு விடும்படியும் கேட்டுள்ளனர். போலீசார் அறிவுரை கூறியும் பயாசுக்கு ஆதரவாக பேசினர் இளம்பெண்கள்.