தஞ்சையின் கூவமாக மாறும் காவேரி – மக்கள் வருத்தம்

காவேரி தண்ணீர் பெருக்கெடுக்கும் வடவாறுஆற்றில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது தஞ்சையின் கூவமாக மாறும் ஆற்றை காப்பாற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழகத்தின் பூம்புகாரில் கடலில் சங்கமிக்கிறது இந்த காவிரியாறு கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு கல்லணைக் கால்வாய் கொள்ளிடம் என நான்கு ஆறுகளாகவும் பின்னர் 22 கிளை ஆறுகள் வாய்க்கால்களாக பிரிகிறது. இதில் வடவாறு ஆற்றை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது இந்நிலையில் தஞ்சை வடவாற்றில் குளத்து மேட்டு தெரு உள்ளிட்ட பல இடங்களில் தஞ்சாவூர் மாநகராட்சியில் சாக்கடை கழிவுநீர் ஆறுகள் போல் வந்து கலக்கிறது.

ஆகையால் காவிரி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வடவாறு தற்போது தஞ்சையில் கூவம் போல் மாறி வருகிறது எனவும், இதனால் வடவாறை காப்பாற்ற வேண்டும் சாக்கடை கழிவு நீர் காவிரி தண்ணீர் கலக்காமல் தடுக்க வேண்டும் எனவும், ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இந்த பணிகளை தஞ்சை மாநகராட்சி செய்ய வேண்டும் என்பது தஞ்சை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

Translate »
error: Content is protected !!