விலை உயர்ந்த செல்போன் ஆசையில் சிறைக்குச் சென்ற இளைஞன்

 

சென்னை அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜன் பாபு (வயது-19) பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தாம்பரம் பகுதியில் உள்ள தனது நண்பனை சந்தித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மாணவனிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

உடனே இச்சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு, புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவனின் செல்போன் என்னை தொடர்பு கொண்டு பார்த்தபோது தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பின்பு செல்போனில் உள்ள ஐ.எம்.ஐ எண்ணை வைத்து டிரேஸ் செய்தபோது செல்போனில் வேரு ஒரு சிம்கார்டை பயன்படுத்தியது குறுந்தகவல மூலம் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

அந்தக் குறுந்தகவலை வைத்து செல்போன் சிக்னலை ஆய்வு செய்து, குற்றவாளி கூடுவாஞ்சேரி நீல மங்கலத்தைச் சேர்ந்த காமேஷ்வரன் (வயது-21) என கண்டுபிடித்தனர். பின்பு, அங்கு சென்று அவரை கைது செய்த போலீசார் தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, இவர் பிராட்வே பகுதியில் உள்ள செல்போன் பழுதுபார்க்கும் கடையில் வேலை செய்து வந்ததும், சமீப நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், காமேஷ்வரனுக்கு விலை உயர்ந்த செல்போன் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையினாலும், கையில் பணம் இல்லாததால் விலை உயர்ந்த செல்போனை திருடியாவது பயன்படுத்தலாம் என்று நினைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார். அதன்பின், காமேஷ்வரனிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Translate »
error: Content is protected !!