கோடைக்கால பழங்களில் ஒன்றான மாங்கனிகளின் வரத்து குறைந்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். கோடைக்காலம் துவங்கும் மார்ச் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு பங்கனபள்ளி, ருமானி, ஹீமாபசந்த், நீளம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான மாம்பழங்கள் விற்பனை வரும்.
ஆனால் இந்த ஆண்டு அதிகப்படியான வெயிலின் தாக்கம் மற்றும் மழை பெய்யாதது உள்ளிட்ட காரணங்களால் மாமரத்தில் பூக்கள் பழமாகும் முன்பே கருகி உதிர்ந்து விடுவதாக கூறப்படுகிறது.
இதனால் வரத்து குறைந்துள்ளதோடு, சீசனும் களைகட்டவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது மாம்பழங்கள் கிலோ 100 லிருந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறிகின்றனர்.