என்னோட க்ரஷ் யார் தெரியுமா? மனம் திறந்த சங்கரின் மகள் அதிதி !

 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இவர் சமீபத்தில் தான் தனது மருத்துவ படிப்பை முடித்தார். மேலும் தற்போது முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார்.

அதிதி சங்கரின் அறிமுக படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளது. இதுமட்டுமின்றி விரைவில் கௌதம் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் இவர் கமிட்டாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அதிதி சங்கரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் உங்களின் செலிபிரேட்டி க்ரஸ் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ராக்கி பாய் (யாஷ்) என்று கூறி இருக்கிறார். இதை கேட்ட யாஷ் ரசிகர்கள் அந்த வீடியோவை டிரெண்டாக்கி வருகிறார்கள்.

 

Translate »
error: Content is protected !!