மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று நடிகர் கார்த்தி சாமி தரிசனம் செய்தார். நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, இயக்குனர்கள் சங்கர், முத்தையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நேற்று இரவு நிகழ்ச்சி முடிந்த நிலையில், இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று கார்த்தி சாமி தரிசனம் செய்தார்.

விருமன் திரைப்பட வெற்றிக்காக அவர் பிரார்த்தனை செய்துகொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Translate »
error: Content is protected !!