கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீர் கடல் சீற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் திடீர் கடல் சீற்றம் தூண்டில் வளைவு உடைந்து சேதமடைந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்த நிலையில் மீனவர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளான அரபிக்கடல் பகுதியில் பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடல் சீற்றத்துடனே காணப்படும்.

இந்த வருடம் ஜூன் மாதம் முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் அழிக்கால், கொட்டில்பாடு, கொல்லங்கோடு போன்ற மீனவ கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் கடல் நீர் சூழ்ந்து சேதமடைந்ததால் மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

தொடர் கடல் சீற்றத்தால் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது கடல் சீற்றம் ஓய்ந்த நிலையில் மீன்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றது.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் குளச்சல், கொட்டில்பாடு மீனவ கிராமங்களில் மீண்டும் திடீரென கடல் சீற்றத்துடனே காணப்பட்டது.

கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் தூண்டில் வளைவுகள் சேதமடைந்து சாலைகளும் உடைந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல்நீர் சூழ்ந்தது சில வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்த நிலையில் அவர்கள் பாதுகாப்பாக உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

தொடர்ந்து கடல் சீற்றத்துடனே காணப்படுவதால் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதோடு கடல்நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து வருவதோடு குடியிருப்பு பகுதிகளில் மேலும் கடல்நீர் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!