தமிழகம் நோக்கி நெருங்கியுள்ள புரெவி புயல் வலுவிழந்தது; எனினும், தூத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது; தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகம் நோக்கி புரெவி புயல் நகர்ந்து வருகிறது. இலங்கையில் கரையை கடந்து தமிழகத்தை நோக்கி வரும் நிலையில், இன்று மாலை 5:30 மணியளவில் இப்புயல், வலுவிழந்தது. எனவே, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அடுத்த சில மணி நேரங்களில் பம்பன் – கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரெவி புயலை வலுவிழந்ததாலும், கடலோர பகுதிகளான ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 6மாவட்டங்களுக்கு நாளை (டிச -4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால், சென்னை – தூத்துக்குடி இடையே செல்லும் பயணிகள் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதேபோல், நாளை தூத்துக்குடி – சென்னை மற்றும் தூத்துக்குடி -மைசூர் சிறப்பு ரயில்கள் தூத்துக்குடி – மதுரை ரெயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படும் எனவும் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.