சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை – மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கிவைத்தார்.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்வகையில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனைமாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கிவைத்தார்.

 மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சரகம் மற்றும் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை இணைந்து திருச்சியில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை இன்று உறையூர் சாலைரோட்டில் உள்ள தனியார் அரங்கில் தொடங்கியது.

41 அரங்குகள் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 72கைத்தறி நெசவாளர் சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் சேலைகள், வேட்டிகள், பெட்ஷீட்டுகள், திரைசீலைகள், துண்டுகள், லுங்கி மற்றும் அனைத்து ரகங்களும் நவீன வடிவமைப்பில் உள்ள உடைகளும் கண்காட்சி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக இந்த கைத்தறி கண்காட்சி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் சிவராசு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்து, ரகங்களையும் பார்வையிட்டதுடன் முதல் விற்பனையினையும் துவக்கிவைத்தார். இன்றுதொடங்கி ஜனவரி 12ம்தேதிவரை நடைபெறும் இந்த விற்பனை கண்காட்சியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 30சதவீத தள்ளுபடியில் ஆடை, ரகங்கள் வழங்கப்படுவதுடன், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்வகையில் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களில் இதுவும் ஒன்று என்றும் வாடிக்கையாளர்கள் கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளர்களை ஊக்குவிக்கவும் வேண்டுகோள் விடுத்தனர்.

Translate »
error: Content is protected !!