தமிழக முதலமைச்சர் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பொது மக்களிடையே பிரச்சாரம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நின்ற தொகுதி ஸ்ரீரங்கம் தொகுதி வரலாற்று சிறப்பு மிக்க தொகுதி. 100 கோடி ரூபாயில் கொள்ளிடம் பாலம் கட்டி கொடுத்தார். 2000 கோடி மதிப்பில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்தார்.

டிஎன்பிஎல் தொழிற்சாலை விரிவு படுத்தும் விதமாக 2,000 கோடியில் விரிவுபடுத்த இருக்கிறோம். தேசிய சட்டக் கல்லூரி தோட்டக்கலைக் கல்லூரி திருவனைக்காவல் மேம்பாலம் முக்கொம்பு கதவணை போன்ற திட்டங்களை கொடுத்துள்ளார். முக்கொம்பு கதவணை மூன்று மாத காலத்திற்குள் செயல்படுத்த கூடும்.

இந்தத் தொகுதி தமிழகத்தின் முன்னோடி தொகுதியாக அமைந்திருக்கிறது அதற்கு அம்மாதான் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். அம்மா 2021 சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அம்மாவின் கோட்டையாக இருக்கவேண்டும் என இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டார்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை கிடைக்காத இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் கொடுத்து விடுவோம்.

Translate »
error: Content is protected !!