திமுக ஆட்சிக்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்தால் தற்கொலை செய்துகொள்வேன்… அதிமுக முன்னாள் எம்.பி. ஆவேசம்.

ராமநாதபுரம்,

திமுக ஆட்சிக்கு வந்து, நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா ராமநாதபுரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொது கூட்டத்தில் பேசிய போது தெரிவித்தார்.

ராமநாதபுரம்  அரண்மனை பகுதியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 104 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் எம்.பி.யும், அதிமுக சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் அன்வர்ராஜா,ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன்,மாவட்ட செயலாளர் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் பேசிய  அன்வர் ராஜா,நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும்அகில இந்திய அளவில், இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ், மருத்துவ படிப்பிற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாக நடத்தப்படுகிறது.

இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தெரிவித்து இருந்தது. நிலைமை அப்படி இருக்க, திமுக எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். அப்படி செய்யவே முடியாது. இன்று அல்ல.

அன்று முதல் பொய் சொல்வதையே திமுக வாடிக்கையாக கொண்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்தால் தான் தற்கொலை செய்து கொள்வதாகஅன்வர் ராஜா ஆவேசமாக பேசினார்இது கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சி தொண்டர்கள் இடையே சல சலப்பை ஏற்படுத்தியது.

Translate »
error: Content is protected !!