பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தால் காந்தி நினைவு நாளில் கூட கண்டுகொள்ளப்படாத காந்தி சிலை. மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் குட்றச்சாட்டு
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி எல்லைக்குட்பட்ட தென்கரை பகுதி தேனி திண்டுக்கல் சாலையில் மார்பளவில் உள்ள காந்தி சிலை மற்றும் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள பகுதியில் முழு உருவ காந்தி சிலை என 2 காந்தி சிலைகள் உள்ளன.
இதில் தேனி திண்டுக்கல் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் காந்தி ஜெயந்தி, சுதந்திர தின, விழா குடியரசு தின விழா, காந்தி நினைவுநாள் உள்ளிட்ட நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறமாக உள்ள மகாத்மா காந்தியின் முழு உருவ சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டுகொள்ளாத நிலையில் நகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் உள்ளது.
இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி குடியரசு தின விழா அன்று பொதுமக்கள் ஒருவரால் போடப்பட்ட காய்ந்து போன மாலையுடன் காணப்படுகின்றது. மகாத்மா காந்தியின் 73வது நிலைவு நாளான இன்று இந்தியா முழுவதில் உள்ள அவரது திரு உருவ சிலை மற்றும் அவரத்து உருவ படத்திற்கு அரசியல் கடசியினர்,
ஆட்சியாளர்கள், காந்திய சிந்தனையாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் மாலை அணைவித்து மரியாதை செய்து வரும் நிலையில் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள முழு உருவ மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்காமலும், பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு நகராட்சி நிர்வாகம் காந்தி சிலைக்கு செல்லும் கதவுகளை பூட்டு போட்டுள்ளதாக சமுக ஆர்வளர்கள் வேதனை தெரிவிப்பதோடு, மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் குட்றம் சாட்டியுள்ளண்ர்.
எனவே இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த காந்தியின் நினைவு நாளான இன்று நகராட்சி நிர்வாகம் கூட காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தாமல் இருப்து வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றன