நாளை மறுநாள் சசிகலா சென்னை வருகை….அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி, ஓ.பன்னீர் செல்வம் இன்று அவசர ஆலோசனை

அண்ணா தி.மு.. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் .பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27ம் தேதி சசிகலா விடுதலையான நிலையில், நாளை மறுநாள் அவர் சென்னை வர உள்ளார்.

இந்த நிலையில் அண்ணா தி.மு.. மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் .பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

சென்னையில் அண்ணா தி.மு.. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலா வருகை, சட்டசபைத் தேர்தலுக்கான வியூகம், தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அண்ணா தி.மு.. தலைமை கழக மூத்த நிர்வாகி கூறியது, தேர்தல் நெருங்குவதால் அண்ணா தி.மு.. மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. அதற்காக இன்று தலைமை கழகத்தில் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

அண்ணா தி.மு.. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. இதில் உள்ள சாத்தியக்கூறுகள் பற்றி மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறியப்படுகிறது. பூத் கமிட்டி செயல்பாடு குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

75 பேர் கொண்ட கமிட்டி ஒவ்வொரு கிளையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 50 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த வீடுகளுக்கு சென்று அண்ணா தி.மு..வின் சாதனைகளை எடுத்து சொல்வது இவர்களது பணியாகும். இந்த பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட உள்ளதாக தெரிகிறது.

 

Translate »
error: Content is protected !!