திருச்சி மாநகரில் 1824 காவலர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் பேட்டி.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊசி அவசர கால அடிப்படையில் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில்,திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்,அரசு மருத்துவர் உள்ளிட்டோர் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்.
இதுவரை 3546 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ள நிலையில், இன்று முதல் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவலர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது,1824 காவலர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில்,இன்று காவலர்களுக்கான முதல் தடுப்பூசியை திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் போட்டுக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லோகநாதன் :
திருச்சி மாநகரில் உள்ள 1824 காவலர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில்,சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு 100 காவலர்கள் வீதம் தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார். 1824 பேருக்கும் கொரோனோ தடுப்பூசி வந்துள்ளது – தடுப்பூசி போடுவதற்காக மொத்தம் 5 இடங்களில் செண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
காவல் துறையில் கடைநிலை ஊழியர் வரை கண்டிப்பாக கொரோனோவிற்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இந்தியாவில் இதுவரை 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – சமூக வலைதளங்களில் தடுப்பூசி குறித்து பரவும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்.