எடப்பாடி அறிவித்த விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி…அரசாரணை வெளியீடு

சென்னை,

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் ரூ. 12,110 கோடி தள்ளுபடி அறிவிப்புக்கான அரசாரணை நேற்று (8-2-2021) வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவு, உணவு மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாரணையில் கூறியிருப்பதாவது.

முதலமைச்சர்  5.2.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ் சட்டமன்றப் பேரவையில், தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு தற்போது பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல், அரசாணையையும் வெளியிட்டு, அதற்கான நிதி ஆதாரத்தையும் வருகின்ற நிதிநிலை அறிக்கையிலேயே ஏற்படுத்த உள்ளது என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்வதுடன், இந்த அறிவிப்பு உடனடியாக செயல்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

 முதலமைச்சரின்  அறிவிப்பினை உடனடியாக செயல்படுத்தும் விதமாக, நேற்று (பிப்ரவரி 8ம் தேதி)  பயிர்க்கடன் தள்ளுபடி  தொடர்பான அரசாணைகள் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர்   விரைவில், விவசாய பெருமக்களுக்கு கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி சான்றிதழை வழங்க, உள்ளார். இவ்வாறு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா அரசாரணையில் தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!