தேனியில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்….

தேனி கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டம், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,

தேனி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு அரசு மருத்துவமனை பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள்  சின்னமனூர், தேனி பொம்மையக்கவுண்டன்பட்டி, ராஜதானி  தேவாரம், கூடலூர், கடமலைக்குண்டு என மொத்தம் 10 இடங்களில் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு பொது சுகாதாரத்துறையின் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுடன் தற்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளையும் உள்ளாட்சித்துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். அதன்படி, பொதுமக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படுகின்ற குடிநீரில் அரசால் நிர்ணைக்கப்பட்டுள்ள அளவு குளோரினை கலந்து வழங்கிடவும், பொதுமக்கள் தலைவலி, தசைவலி, கண்வலி, உடலில் அரிப்பு, மூட்டுவலி மற்றும் வாந்தி போன்ற டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தென்படின், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி, உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் ஏழு நாட்களுக்குள் காய்ச்சல் குணமாகும்.

மேற்கண்டவைகள் தொடர்பாக, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பணிகளை  தொடர்ந்து, பொதுமக்களிடையே ஏற்படுத்தி, டெங்கு கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு, பொதுமக்கள் தங்களின் சுற்றுபுறச் சூழலை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க அறிவுறுத்திட வேண்டும்.

மேலும், நமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) செந்தில்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை, அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!