நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி

சென்னையை அடுத்த கொளத்தூரில் நீண்ட நேரம் செல்போனில் விளையாடும் தனது பொண்ணை விளையாடக் கூடாது என தாய் கண்டித்ததால் மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்த கணவரை இழந்த அம்சா என்ற பெண்மணி, செல்போனில் கேம் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டுமென தனது மகளை திட்டியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மனம் உடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது மாணவி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Translate »
error: Content is protected !!