டெல்லியில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 36 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14,15,517 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,098 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 285 ஆக உள்ளது. தொற்று விகிதம் 0.08 சதவீதமாக உள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 28,098 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு விகிதம் 4.67- சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் 1.74-சதவீதமாக உள்ளது.

Translate »
error: Content is protected !!