இந்தியாவில் மொத்தம் 153 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது.

கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 143 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150ஐ தாண்டியுள்ளது.11 மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. மராட்டியத்தில் 54 பேர், டெல்லியில் 22 பேர், தெலுங்கானாவில் 20 பேர், ராஜஸ்தானில் 17 பேர், கர்நாடகாவில் 14 பேர், குஜராத் மற்றும் கேரளாவில் 11 பேர், ஆந்திரா, தமிழ்நாடு, சண்டிகர் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா ஒருவர் உட்பட மொத்தம் 153 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!