நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்த இளைஞர் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
29 வயதான அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை மற்றும் மூன்று டோஸ் ஃபைசர் தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு 40 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.