அப்துல் கலாமின் 90 வது பிறந்தநாள் இன்று.. மணிமண்டபத்தில் குடும்பத்தினர்கள் மலரஞ்சலி

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 90 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், ராமேசுவரம் பேய்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் அப்துல் கலாமின் சமாதிக்கு முன் குடும்பத்தினர் மற்றும் ஜமாத் அதிகாரிகள் தொழுகை நடத்தினர். பின்னர் அவர்கள் அவரது கல்லறைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்கள் இனிப்புகளை வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர். இந்த நிகழ்வில், அப்துல் கலாமின் பேரன்கள் சேக்சலீம், சேக் தாவூத், அண்ணன் மகள் நசீமாபேகம் மற்றும் நடிகர் தாமு உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!