மகான் திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜை, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மகான்’. இந்த திரைப்படத்தில் நடிகை சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசி மூலம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்து கூறி, பாராட்டியுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த கார்த்திக் சுப்புராஜ், உங்கள் அழைப்புக்கு நன்றி தலைவா…! என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.