தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கி வரும் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 2011ம் ஆண்டு வெளியான நூவில்லா எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான இந்த இளம் ஹீரோவுக்கு அர்ஜுன் ரெட்டி படம் இந்தியளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்தது.
அர்ஜுன் ரெட்டி படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து அந்த படம் தமிழில் ஆதித்ய வர்மா என்ற தலைப்பிலும், இந்தியில் கபீர் சிங் என்றும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு இன்று 31வது பிறந்தநாள்.
இதையொட்டி, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். நடிகை சமந்தா, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலரும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.