அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி பிரைம் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒடிசாவில் உள்ள பாலசோர் கடற்கரையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அக்னி ஏவுகணைகளில் அதிநவீனமான அக்னி பிரைம் 2,000 கி.மீ தூரம் வரை சென்று இலகக்கை தாக்கக்கூடியது.
அக்னி பிரைம் ஏவுகணை இதுவரை தயாரிக்கப்பட்ட அக்னி ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட புதிய வகை வகையாகும். அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி கழகத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.