பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பாஜக பிரமுகரின் உதவியாளர் கைது

 

நங்கநல்லூரில் வடமாநில பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பாஜக பிரமுகரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் அடுத்த பழவந்தாங்கல் பக்தவச்சலம் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் 2ஆம் தளத்தில் ரிங்க்கி என்பவருடன் பேயிங் கெஸ்டாக தங்கி இருப்பவர் மும்பையை சேர்ந்த பூஜா நட்வர் (27). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே கட்டிடத்தில் தரை தளத்தில் ரிங்க்கியின் சகோதரர் பவன் (25) தங்கி உள்ளார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலைப் பார்ப்பதுடன் பாஜக மாநில பொதுச்செயலாளரான கரு. நாகராஜன் என்பவரிடம் இந்தி மொழிபெயர்ப்பு மற்றும் அலுவலக உதவியாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று பவன் வீட்டை சுத்தம் செய்யச் சொல்லி பூஜாவிடம் வாய் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியபோது பவன் பூஜாவின் மேலாடையை கிழித்து கையால் தலை, இடதுதோள்பட்டை, மார்பு போன்ற பகுதிகளில் அடித்தும் தவறாக நடக்கவும் முயன்றுள்ளார்.

இதுகுறித்து பூஜா பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளர் சபரிநாத் வழக்குப்பதிவு செய்து பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!