3 மொழிகளில் வெளியாகவுள்ள அஜித்தின் வலிமை


நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் வலிமை திரைப்படம் 3 மொழிகளில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித், கார்த்திகேயா, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் வலிமை,, போனிகபூர் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்,, சமீபத்தில் படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ, விசில் தீம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது,, இந்நிலையில் வலிமை திரைப்படத்தை பொங்கலன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும் மொழிகளில் வெளியிடுவதற்கான பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!