மத வேறுபாடின்றி,  ஒற்றுமை உணர்விற்க்கான செயல்

 

 

காரைக்குடியில் மாரியம்மன் கோயிலுக்கு அலகு குத்தி, பால்குடம் எடுத்து சென்ற பக்தர்களுக்கு, பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தண்ணீர் ஊற்றி, உதவி செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி பங்குனி திருவிழா கடந்த 8 ம் தேதி தொடங்கியது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அந்த வகையில், பால்குடம்கட்டி , மற்றும் தீசட்டி சுமந்து, அலகு குத்தி, அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் சென்றனர்.

அப்போது, பஜார் பள்ளிவாசல் சேர்ந்த இஸ்லாமியர்கள், சாலையிலும், பக்தர்கள் மீதும் தண்ணீர் ஊற்றி வெப்பதை குறைத்தனர். இவர்களின் இந்த செயல்,  மத வேறுபாடின்றி,  அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதைக் காட்டியது.

 

Translate »
error: Content is protected !!