அவசர காலத்தில் உதவாமல் அரசியல் செய்து வருகிறார் அண்ணாமலை – கனிமொழி பேட்டி

சென்னை தி நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 10,000 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்றஉறுப்பினர் வேலு மற்றும் டி நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோரிருந்தனர்.

இந்நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி அவர்கள், மழை நீர் மேலாண்மை மற்றும் கழிவுநீர் மேலாண்மை குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

அதில் அவர், சென்னையில் மழை வெள்ளம் என்பது நீண்ட காலம் போராட்டமாகவே உள்ளது எனவும், இதிலிருந்து மீள நிரந்திர முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் எனவும், நீர் வழி பாதைகளை மறித்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டியதே வெள்ளத்துக்கு முக்கிய காரணம் எனவும், கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலை நிச்சயமாக நடைபெறும் எனவும் கூறினார்.

மேலும், முதல்வரின் தொகுதியிலேயே குறை இருப்பதாக கூறிய அண்ணாமலை பற்றி கேள்வி எழுப்பிய போது, மழை காலத்தில் மக்களுக்கு உதவாமல் அண்ணாமலை அரசியல் செய்து வருவதாக பதிலளித்தார்.

 

 

 

 

Translate »
error: Content is protected !!