உத்தரபிரதேச அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா

உத்தரபிரதேச அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த தாரா சிங் சவுகான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்களுக்கு எதிராக யோகி ஆதித்யநாத் அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

பாரதீய ஜனதா கட்சியில் இருந்து தாரா சிங் சவுகான் விலகினாரா என்பது அறிவிக்கப்படாத நிலையில், ‘அகிலேஷ் யாதவ்’, சமாஜ்வாதி கட்சிக்கு வரவேற்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தாரா சிங் சவுகானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!