தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, மழை மற்றும் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள ஐஏஎஸ் தலைமையிலான பல அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகளை கண்காணிக்க பத்து மாவட்டங்களுக்கு கூடுதலாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இவர்கள் குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியருடன் இணைந்து அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – ஜெயகாந்தன் ஐஏஎஸ்,
ஈரோடு மாவட்டம் – பிரபாகர் ஐஏஎஸ்,
வேலூர் மாவட்டம் – நந்தகுமார் ஐஏஎஸ்,
ராணிப்பேட்டை மாவட்டம் – செல்வராஜ் ஐஏஎஸ்,
நாகப்பட்டினம் மாவட்டம் – பாஸ்கரன் ஐஏஎஸ்,
கடலூர், சிதம்பரம் மாவட்டம் – அருண் ராய் ஐஏஎஸ்,
மதுரை மாவட்டம் – வெங்கடேஷ் ஐஏஎஸ்,
திருவள்ளூர் மாவட்டம் – ஆனந்த் குமார் ஐஏஎஸ்,
அரியலூர் & பெரம்பலூர் மாவட்டம் – அணில் மேஷ்ராம் ஐஏஎஸ்,
விருதுநகர் மாவட்டம் – காமராஜ் ஐஏஎஸ்
உள்ளிட்ட பத்து அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.