வனப்பகுதியில் குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்க விழிப்புணர்வு

வனச்சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் வன விலங்குகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி உயிர் இழப்பதைத் தவிர்க்கும் வகையில் தாளவாடி வனத்துறையினர் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனப்பகுதிக்குள் அமைந்துள்ள சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கும் போது வாகனங்கள் மீது மோதி வனவிலங்குகள் அதிகளவில் உயிர் இருக்கின்றன. இதனை தவிர்க்கும் வகையில் தாளவாடி வனத்துறையினர் சிக்கள்ளி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் புலி காப்போம் புவி காப்போம், செல்வோம் செல்வோம் 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வோம், மோதாதே மோதாதே வன சாலையில் உள்ள வன உயிரினத்தின் மீது மோதாதே என்ற பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். இதில் தாளவாடி வனச்சரகர் சதீஷ் மற்றும் சிக்கள்ளி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா பள்ளி மாணவ மாணவியர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!